நாம் ஒருங்கிணைந்து சவால்களை முறியடிப்போம் -கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட்

Published by
Venu

நாம் ஒருங்கிணைந்து சவால்களை முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்துள்ளார் .

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வந்த வைரஸ், தற்போது நாடு முழுவதும் பரவி இருக்கிறது. இதன் விளைவு காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளன.  . இதனிடையே அண்டை மாநிலமான கேரளா, தமிழகத்தில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து சாலைகளும் தடுக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது என்று வதந்தி பரவி வந்தது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் முற்றுப்புள்ளி வைத்தார். அதாவது இதுபோன்ற ஒரு விஷத்தை நாங்கள் நினைத்ததில்லை என்றும் அவர்கள் அண்டை மாநிலத்தவர்கள் மட்டுமில்லை அவர்களை சகோதர்களாகவே பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

இதனை தமிழக முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசிய வீடியோ- வுடன் பதிவிட்டார். அதில் கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்று துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் ட்விட்டிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதில் ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

5 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago