இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

Published by
லீனா

இன்று எம்.எல்.ஏ-வாக பதவியேற்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார்.

இந்நிலையில், செப்.30-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளையும்  பெற்றனர்.

இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, வருகின்ற அக்டோபர் 7 -ம் தேதி மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் அவர்கள், பவானிபூர், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான மூன்று எம்எல்ஏ -க்கள், முதல்வர் மம்தா பானர்ஜி, அமிருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Recent Posts

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…

1 minute ago

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

20 minutes ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

39 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago