[Image Source : Vikatan]
ராமநவமியின் போது ஏற்பட்ட வன்முறை வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு.
மேற்கு வங்க மாநிலத்தில் ராமநவமியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹவுரா, தக்கோலா உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகள் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த்த மாதம் ராம நவமியை முன்னிட்டு ஹவுரா, தக்கோலா உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் நடந்த ஊர்வலத்தில் அடுத்தடுத்து வன்முறை வெடித்தது. ராம நவமி ஊர்வலத்தின் இடையே, கல் வீசப்பட்டு, பெரும் வன்முறையாக மாறியது. இதில், பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியிருந்தது. காயம் அடைந்த எம்எல்ஏ பிமன் கோஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன, அதே வேளையில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதற்கும் மேற்குவங்க மாநில காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 30க்கு மமேற்பட்டோர் காய்த்து செய்யப்பட்டனர். கலவரத்திற்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், ராமநவமி வன்முறை தொடர்பாக பல்வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டது. அம்மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில், தற்போது மேற்கு வங்க ராமநவமியின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…