பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.எனவே மத்திய அரசு இந்த சட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகின்றது.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பேசினார்.அவர் பேசுகையில்,இந்த சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகிறது.இந்த சட்டம் குறித்து என்னுடன் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவா் மாயாவதி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி உள்ளிட்டோர் தயாரா என்று சவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு பதில் அளிக்கும் விதாமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், எந்த இடத்திலும், எந்த தளத்திலும் விவாதம் நடத்த தயார் என்று தெரிவித்துள்ளார்.சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதம் நடத்த நான் தயார்.பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய பிரச்சினைகள் குறித்தும் பா.ஜ.க தலைவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…