ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், நீதிபதி பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கையை நிராகரித்து, வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில், அந்த மனு மீதான தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் பைலட் மற்றும் 18 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் காங்கிரசுக்கு 102 இடங்கள் மட்டுமே உள்ளது.
இந்த 6 எம்.எல்.ஏக்கள் இணைபுக்கு தடைவிதிக்கப்பட்டால் காங்கிரஸ் பலம் 96 ஆககுறைந்துவிடும். வருகின்ற 14-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…