Bengaluru Woman Steps [file image]
பெங்களூரு : டி.ஜே.ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் பகுதியான கனகநகர் பகுதியில் பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்ததில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.கே.பேலஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் கணவருடன் அந்த பெண் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கீழே இருந்த சோப்பில் மிதித்து கீழே விழுந்ததாக அந்த பகுதி வட்டாரங்கள் தகவலை தெரிவித்தன. கீழே விழுவதற்கு முன்பு மனைவியை மேலே இருந்த அவருடைய கணவர் தாங்கி பிடித்து கொண்டு இருந்தார்.
ஆனாலும், கொஞ்ச நேரம் மட்டுமே அவரால் பிடித்து இருக்க முடிந்தது. பின் அவருடைய மனைவி கீழே விழுந்தார். கிழே நிறைய இருசக்கர வாகனங்கள் இருந்த நிலையில், அதில் விழுந்து அந்த பெண்ணின் தலையில் பயங்கரமாக காயமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு இருந்த ஒருவர் பெண்ணை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏற்றி விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது கீழே விழுந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அந்த பெண் தற்போது கோமா நிலையில் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த பெண் கீழே விழும்போது அக்கம் பக்கத்தில் மாடியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டும், கீழே இருந்தவர்கள் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…