Union Minister Arjun Ram Meghwal. (PHOTO:ANI)
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவை, மாநிலங்களவை கூடவுள்ள சூழலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று கூட்டத்தொடரில் பேசிய பிரதமர் மோடி, சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
அந்தவகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்றே தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்யவுள்ளார். இதன்பின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, நாளை மறுநாள் மாநிலங்களவையில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
எனவே, இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில், இதை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கும் அதே பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…