Uttarakhand Uttarkashi Silkyara mine accident [Image source : PTI]
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இவர்களை மீட்கும் பணி இன்றுடன் 13 நாட்களாக நடைபெற்று வருகிறது. 8 குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக உள்ள குழாயை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினமே இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை சுரங்கம் தோண்டும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதனை சரி செய்து, அவர்களை மீட்கும் பணியில் அங்குள்ளவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் வெளியே வரும் வரை அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவை குழாய் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மீட்பு பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் கண்காணித்து வருகிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…