மகாராஷ்டிரா புனேவில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம்!

Published by
Rebekal

மகாராஷ்டிராவிலுள்ள மிகப்பெரிய நகரமாகிய புனேவில் 2021 ஆம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய முக்கிய நகரமாகிய புனேவில் சர்வதேச விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டாகிய 2021 – 2022 முதல் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்படும் என மகாராஷ்டிர விளையாட்டு துறை அமைச்சர் சுனில் கேதார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பயிற்சி மற்றும் மேம்பாடு தவிர பல்வேறு விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் உள்ள நுட்பங்களை ஒன்றிணைக்கும் தளமாக இந்த பல்கலைக்கழகம் இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆரம்ப நிதி உதவியுடன் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகள் தவிர உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு பயிற்சிகளையும் இந்த வளாகத்தில் மேற்கொள்ளக் கூடிய அளவு உட்கட்டமைப்பு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரங்களுடன் அமைக்கக்கூடிய விளையாட்டு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தரமான பயிற்சி மற்றும் உள்ளீடுகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதிகப்படியான விளையாட்டு பாரம்பரியத்தை கொண்டுள்ள நமது மாநிலத்தில் பல்வேறு தகுதியான மற்றும் சிறப்பான விளையாட்டுவீர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது நமது கடமை எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

11 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

13 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago