Categories: இந்தியா

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு திட்டம்..! இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Published by
செந்தில்குமார்

உலகின் மிக பெரிய தானிய சேமிப்புக் கிடங்கை இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கூட்டுறவு துறையில் உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம்  மூலம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் 2,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டத்தை மேற்பார்வையிட, மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர், இந்த முடிவு எண்ணற்ற நன்மைகளை ஏற்படுத்தும், இந்தத் திட்டம் உணவு தானியங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நியாயமான ஊதியத்தை உறுதி செய்யவும், பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்று கூறினார்.

மேலும், இந்தியா ஆண்டுதோறும் 3,100 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் போதிய சேமிப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக தானியங்கள் வீணாகின்றன, இதனால், விவசாயிகள் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

59 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago