இமாச்சல பிரதேசம் சிம்லாவில் இருபத்திரண்டு வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்ற தவறான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி அம்மாநில சட்டசபையில் அதிர்வலையை உண்டாக்கியது.
இறந்துபோன அந்த பெண்ணிற்கு, ‘தனக்கு எச்ஐவி வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான சோதனை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிற்கு எச்ஐவி இருப்பதாக அந்த மருத்துவமனை தகவல் கொடுத்து உள்ளது. இதனை, கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கோமாவில் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
பின்னர், இறந்த அந்த பெண்ணிற்கு எய்ட்ஸ் தொடர்பான ஆரம்ப சோதனை அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டது. அந்த ஆராய்ச்சி முடிவுகளை ஆராய்ந்தபோது அந்த பெண்ணிற்கு எச்ஐவி வைரஸ் தாக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு அந்தப் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நோய் இல்லாத ஒரு பெண்ணுக்கு நோய் இருப்பதாக கூறி அந்தப் பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இமாச்சல் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ரோஹ்ரூ அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இமாச்சல பிரதேச முதல்வர் விசாரணை நடத்த வேண்டும் என அதனால் அந்த அறிக்கையை 15 நாட்களுக்குள்சு காதாரத்துறை தாக்கல் செய்ய வேண்டும், எனவும் உத்தரவிட்டுள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…