JEE Advanced 2023 [Image Source : PTI]
JEE அட்வான்ஸ் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள மாணவர்கள் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் மே7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூன் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது. நேற்று JEE முடிவுகள் வெளியான நிலையில், JEE அட்வான்ஸ்-க்கான விண்ணப்பங்கள்
இன்று முதல் வழங்கப்படுகின்றன.
என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தாள் 1 காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், தாள் 2 பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படும்.
தகுதி வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1998 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு ஐந்தாண்டு வயது தளர்வு வழங்கப்படுகிறது. அதாவது, இந்த விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 1, 1993 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.
JEE அட்வான்ஸ் தேர்வு:
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) பல்வேறு திட்டங்களில் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாணவர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் JEE தேர்வை அதிகபட்சம் இரண்டு முறை முயற்சி செய்யலாம். தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் மட்டுமே நடைபெறும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…