‘உங்களுக்கு நான்கு நாட்கள் உள்ளது’ – உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்…!

Published by
லீனா

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் வாட்ஸ்அப் அவசர டயல் எண் ‘112’ இல், ‘இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன’ என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில்,  தொடர்பாக  புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  அச்சுறுத்தல் பெறப்பட்ட எண்ணைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய காவல்துறையினர் தனி கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘தனிநபரைக் கைது செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 29 மாலை இந்த அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உ.பி. முதல்வருக்கு மரண அச்சுறுத்தல் வருவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆதித்யநாத்தை அச்சுறுத்தும் அழைப்புகள் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரபிரதேச முதலமைச்சருக்கு 2017 ஆம் ஆண்டில் ‘Z+’ வி.வி.ஐ.பி ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட்டது. 25-28 ஆயுதமேந்திய கமாண்டோக்கள் எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்து செல்வர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், ‘முதலமைச்சரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அவர் நாடு முழுவதும் எங்கு சென்றாலும், சிஐஎஸ்எஃப் கமாண்டோக்களின் வலுவான குழுவால் பாதுகாக்கப்படுவார். இதேபோன்ற கமாண்டோ குழுவினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுத்தப்படுவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago