இந்தியாவில் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்..!

Published by
Sharmi

இந்தியாவில் ஜைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

கொரோனா பெருந்தொற்று உலகத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளாக கோவாக்ஸின்  மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை  தொடர்ந்து அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஜைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைத்து விட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜைகோவ்-டி தடுப்பூசி இந்தியாவிலேயே முதன்முதலில் 12 முதல் 18 வயதுடையவர்களுக்காக தயாரிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி நிறுவனம் இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 1 ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் இன்ஜெக்டரை பயன்படுத்தி செலுத்தப்படும். இதனை அடுத்த படியாக இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளும் மிகவும் குறைவானது. இந்த தடுப்பூசியை 50 இடங்களில் 1000 குழந்தைகள் உட்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Sharmi

Recent Posts

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 minutes ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

2 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

3 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

4 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

4 hours ago