ஓஎன்ஜிசி நிறுவனத்தை எதிர்த்து போராடியதால் கைது செய்யப்பட் டுள்ள 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். இதற்காக போராடிய தால் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கதிராமங்கலம் அய்யனார் கோயி லில் கிராம மக்கள் 3-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் […]
ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரியின்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம், ஜிஎஸ்டி முன் 13.68% வரி இருந்ததாகவும். தற்போது ஜிஎஸ்டியின் கீழ் 12% வரி விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஜிஎஸ்டி […]
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் […]
சென்னை: தமிழகத்தில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான சுயநிதிக் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது பொறியியல் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கான தரச்சான்று அல்லாத பாடப்பிரிவுக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தரச்சான்று அல்லாத நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கான பாடப்பிரிவுக்கான கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 85 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று என்பிஏ அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுக்கான […]
சென்னை: ‘தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில், ஆன்லைனில் நடத்தப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பெற்றோர், மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டியுள்ளது. அதற்காக, இலவச பஸ் பாஸ் வழங்குவது, அண்ணா பல்கலையில் தங்குமிடம் ஏற்படுத்துதல் போன்ற, […]
தமிழ்தேசியப்போராளி ஐயா ஓவீயர் வீரசந்தானம் அவர்கள் நேற்று( 13/07/17) மாரடைப்பால் காலமானார் அவருக்கு தமிழின மீட்புப் புலிகள் சார்பாக அஞ்சலி செலுத்தினர் அவர் இறந்ததுபோல் தெரியவில்லை அதே கம்பீரத்தோடு உறங்கி கொண்டடிருப்பது போல் இருந்ததுதமிழ் தேசியத்துக்கு ஒரு பெரிய இழப்பு ஆகத்து 10 – 1947 ல் பிறந்த ஐயா அவர்களின் மனைவி, மகள், அமெரிக்கா வில் வாழும் மற்றொரு மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழின மீட்புப் புலிகள் மற்றும் தினச்சுவடு சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து […]
சென்னை: மருத்துவப் படிப்பில், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து தீர்ப்பளித்துள்ளது. ‘இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி […]
டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அரசு அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையால் சுற்றுலா அலுவலகத்தில் இருந்த கணினிகள் எரிந்து நாசாமாகியுள்ளன. மேலும் வன்முறையால் டார்ஜிலிங்கில் பதற்றம் நிலவுகிறது
பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுடில்லி : உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலை., சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். அமெரிக்கர்கள் 4774 […]
டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய […]
புதுடில்லி : தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய […]