தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தில் உள்ள 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் நடப்பு கல்வியாண்டுக்கு ரூ.38.37 கோடி மானியம் வழங்கப்படும்.
இந்நிலையில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,அதன் முன்தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக,ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை இன்று விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…