இந்திய ஹாக்கி அணிக்கு 1 கோடி ரூபாய் பரிசு.! முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி  4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகை என மொத்தமாக தமிழக அரசு சார்பில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

இறுதி போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீரர்களுக்கு 5 லட்சம் பயிற்சியாளர்க்ளுக்கு பரிசு என கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு, நன்றி. போட்டிகள் நடைபெற்ற அத்தனை நாளும் அரங்கத்தை ஹவுஸ்புல்லாக வைத்த ரசிகர்களுக்கு நன்றி. இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு போட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

8 minutes ago

டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…

18 minutes ago

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

45 minutes ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

55 minutes ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

1 hour ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

2 hours ago