[FILE IMAGE]
மாணவர்கள் இடை நின்றதற்கான காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழ்நாட்டில் நேற்று 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றார். இதன்பின் பேசிய அமைச்சர், அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை, 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2023-24-ல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து 100% கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை 100% மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகளின் தரவுகளை செல்போன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் இடை நின்றதற்கான காரணங்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார சூழல், குடும்ப சூழல் காரணமாக பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…
பாங்காக் : தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…
பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…
சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…