தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!
தென்கிழக்கு ஆசிய நாடுகளாக உள்ள தாய்லாந்து - கம்போடியா இடையே சண்டை வெடித்துள்ளது. இருநாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றம் இன்னும் தணியவில்லை.

பாங்காக் : தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முதல் இருநாடுகள் இடையேயான மோதல் வலுவடைந்து போராக மாறி உள்ளது.
இருநாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் இன்னும் தணியவில்லை. சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இரண்டாவது நாளாக மோதல்கள் தொடர்ந்துள்ளன. இதனால், தாய்லாந்து நாட்டின் எல்லையோர பகுதிகளில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கம்போடியா ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த 6F-16 வகை போர் விமானங்களை தாய்லாந்து களமிறக்கியுள்ளது. இந்த மோதலில் 15 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளோம் என இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மோதல்கள் காரணமாக, உபோன் ரட்சதானி, சூரின், சிகாகெட், புரிராம், சகேயோ, சந்தபுரி, புராட் ஆகிய 7 மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு, இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என்று தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் எச்சரித்துள்ளது. மேலும், இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு [email protected] என்ற மின்அஞ்சலில் தெரிவிக்கலாம்.
🚨Just In : Indian mission in Cambodia cautions travelers to steer clear of border regions. This move comes as a precaution due to unspecified security concerns.#thailandcambodiaconflict pic.twitter.com/vtcdsIbghX
— Backchod Indian (@IndianBackchod) July 26, 2025