10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது அவசியம் – முதல்வர் பழனிச்சாமி .!

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் அனைத்து கடைகளும் , திரையரங்கம் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன.மேலும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேர்வு நடத்த முடியாததால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையெடுத்து அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு ரத்து குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் என விளக்கம் கொடுத்தார்.இந்நிலையில் இன்று முதல்வர் பழனிச்சாமி கொரோனா வைரஸ் தடுக்க, அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம். 9ஆம் வகுப்பு போல பொதுத் தேர்வை ரத்து செய்வது சரியாக இருக்காது என்றும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முக்கியமான தேர்வாகும்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து ஆலோசித்து முடிவுஎடுக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025