12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தனர். மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்து இருந்தது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று பிற்பகல் மாநிலங்களவை அவை மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பை மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்தார்.
இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வைக் குறைக்கின்றன. இந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…