தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதி..பொதுப்பணித்துறை..!

Published by
murugan

கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் 12,370 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள்.

பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்அலை வந்த பொழுது தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய 138 மருத்துவமனைகளில் ரூ.282.51 கோடி மதிப்பில் 27,806 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் இதர சுகாதார வசதிகள் ஏற்படுத்தும் பணிகள், பொதுப்பணித்துறையால் அவசரகால பணியாக மேற்கொள்ளப்பட்டது.

இதில் 21,692 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.  அதுபோலவே இவ்வாண்டு கொரானா இரண்டாம்அலையை எதிர்கொள்ளவும், பொது மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிடவும் அனைத்து மருத்துவமனைகளிலும் 12,370 ஆக்சிஜன் இணைப்புகளுன் படுக்கை வசதிகள் அமைக்க அரசு அறிவுறுத்தலின் பேரில் பொதுப்பணித் துறையால் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு 2,912 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டது. இத்துடன் கூடுதலாக இவ்வாண்டு 2,895 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்கும். பணி நடைபெற்று வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை கூடுதல் ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 550, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500, அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூரில் 225, கிங்ஸ் இன்ஸ்டிடியூட் கிண்டியில் 200 மற்றும் சென்னையில் உள்ள இதர சுற்றுவட்டார 11 மருத்துவமனைகளில் 1420 கூடுதல் ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக 434 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், திருச்சி மாவட்டத்தில் 585, தஞ்சாவூர் மாவட்டத்தில் 583, கோயம்புத்துார் மாவட்டத்தில் 311, மதுரை மாவட்டத்தில் 225 மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 325 மற்றும் பிற மாவட்டங்களில் கூடுதலாக 7,012 ஆக்ஸிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ துறையை சார்ந்த மருத்துவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஆகியோர் நாள்தோறும் கலந்து ஆலோசித்து இரண்டாம்அலையை எதிர்கொள்ள மருத்துவத்துறைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பொதுப்பணித்துறை தீவிரமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது.

Published by
murugan

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

7 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

40 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

40 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago