இன்று உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் கொரோனாவால் உயிரிழப்பு.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலி எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 89 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 19-ம் தேதி தெரியவந்தது. இந்தநிலையில், 23ம் தேதி பிற்பகலில் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அன்று மாலை 07.55 மணிக்கு உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு நிமோனியா, நியூரோமைலிடிஸ் ஆப்டிகா (NMO), மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS) , இம்யூனோசுப்ரசண்ட்ஸ் தெரபி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297 லிருந்து 1,51,055 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…