கோவையை சார்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகள் சுபஸ்ரீ( 19) இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வைத்துள்ளார். சுபஸ்ரீ கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில், அவர் தோல்வி அடைந்தார். பின்னர், மருத்துவ படிப்பில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குஉச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இதனால், இந்த முறை தேர்ச்சி பெறுவோமா..? என்ற மன குழப்பத்தில் இருந்த சுபஸ்ரீ நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுபஸ்ரீயின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…