அபராதம் 1 கோடியை நெருங்குகிறது..ஊரடங்கை மீறி சுற்றிய 2,18,533 பேர் கைது.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது தற்போது ஒரு கோடியை நெருங்குகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன.

அதுபோன்று தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.98,07,394 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை விதிகளை மீறியதாக 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

16 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

57 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago