தமிழகத்தில் 24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறது – முதல்வர் பழனிசாமி

Default Image

தமிழகத்தில் 24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் 24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், கொரோனா தடுப்புப்பணியில் மும்மடிப்பு முகக்கவசங்கள் 32 லட்சம், என்.95 முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளது என்றும், அரசின் நடவடிக்கையால் உணவுப்பொருட்கள், காய்கறிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT