தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு சீரமைக்கும் பணிகள், அலங்கார பணிகள் மற்றும் தங்கம் பூசப்பட்ட கலச கும்பங்கள் கோவிலின் கோபுரத்தில் அமைப்பது போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவிற்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக முன் எச்சரிக்கை நடவெடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில், குடமுழுக்கு திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சென்று கண்டுகளிக்க இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனை கோயம்பேட்டில் உள்ள குறுங்காளீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர், முன்னதாக கோவிலில் நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கார், தஞ்சைக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அந்தந்த பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…