திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேரும் , நான்காம் ஆண்டு மாணவர்கள் 11 பேரின் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 28 மாணவர்களையும் 7 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு விட்டார்.இதை தொடர்ந்து போலீசார் திருச்சி உள்ள மத்திய சிறையில் மாணவர்களை அடைந்தனர்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…