கொரோனாவால் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்கள் பலி .!

Published by
கெளதம்

சென்னையில் 21, 24, 25 வயது இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,276  பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் கொரோனாவால் 12.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞர் 14.06.2020 மூச்சு தினறால் உயிரிழந்தார். 13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயது இளைஞர் அதே போல் மூச்சு தினறால் 16.06.2020 உயிரிழந்தார்.  மேலும் 13.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் 16.06.2020 உயிரிழந்தார். 

Published by
கெளதம்

Recent Posts

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

5 minutes ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

45 minutes ago

சிரியாவுக்கு 41% இறக்குமதி வரி – ஷாக் கொடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல நாடுகளின் மீது புதிய…

1 hour ago

கேரளா : பள்ளி ஆண்டு விடுமுறையை ஜூன் – ஜூலைக்கு மற்ற அரசு திட்டம்?

கேரளா :  கேரள அரசு, பள்ளிகளின் ஆண்டு விடுமுறையை கோடைக்காலமான ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து மழைக்காலமான ஜூன்-ஜூலை மாதங்களுக்கு மாற்றுவது…

2 hours ago

இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது – மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

சென்னை :  மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), இன்று (ஆகஸ்ட் 1 ) முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை…

2 hours ago

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

16 hours ago