கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது என சரத்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.
மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கை ரீதியாக ஒன்று சேர்கிறோம். மக்களுக்காக சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக சிந்திக்க கூடாது. சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும் எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் கமலை சந்தித்து கூட்டணி குறித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…