திருச்சியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது!

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்தமிழகத்தில் சேவல் சண்டை என்பது பிரபலமான ஒரு விளையாட்டாக கருதப்படுவதுடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை போல இது கருதப்படுகிறது. தங்களுடைய சேவலை சண்டைக்கு விட்டு, ஜெயிப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த விளையாட்டை நடத்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய அய்யன் தோப்பு என்ற பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. இந்த சேவல் சண்டை நடத்திய தர்மராஜ், அசோக் செல்வராஜ்,ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஆறு இரு சக்கர வாகனங்களும், ஆம்னி கார் மற்றும் 43 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025