4ஆம் குழந்தையும் பெண்னாக பிறந்தகால், கள்ளிப்பால் கொடுத்து சிசுக்கொலை செய்தாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி வாக்குமூலம் அளித்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் சேர்ந்த தம்பதி தவமணி, சித்ரா. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், சிறிது நாட்களுக்கு முன் நான்காவதாக சித்ராவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அந்த பெண் சிசு, சிறிது நாளிலே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சிசுவை வைகை ஆற்றில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சோழவந்தான் வி.ஏ.ஓ, காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது 4ஆம் குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால், அதனை கள்ளிப்பால் கொடுத்து கொன்றதாக குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…