தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தடுப்பூசி மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சென்னை தாம்பரம் அருகே கருப்பு பூஞ்சைக்கான மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, ஹைலோ ஆப் என்கின்ற செயலியில், மளிகை பொருட்களை விற்பனை செய்வது போல வடிவமைத்து, அதில் கருப்புப்பூஞ்சை நோய்க்கான மருந்து இருப்பதாக பதிவிட்டிருந்தனர்.
இதனையடுத்து, வண்டலூரை சேர்ந்த சரவணன், இரண்டு தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருந்தக ஊழியர்கள், அறிவரசன், தம்பிதுரை,பணியாளர் விக்னேஷ் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் நிர்மல்குமார் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு மருந்து விநியோகம் செய்த நபரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…