MadrasHC: சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். அதன்படி, கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகிய 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் இவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகி்த்து வந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமி்க்க சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருந்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எ.எ.நக்கீரன், நிடுமொலு மாலா, எஸ்.செளந்தா், சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகிய 5 பேர், கா்நாடக உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த அனந்த் ராமநாத் ஹெக்டே, ஹேமலேகா ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேர் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.