9 SKIN: 6 வருட உழைப்பு! தனது பெயரில் சொந்த தொழிலை தொடங்கிய நயன்தாரா!

Nayanthara 6 SKIN

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 9ம் தேதி ஏதோ ஒரு சிறப்பு அறிமுகம் என்று அறிவித்திருந்தார். உடனே, ரசிகர்கள் என்னவாக இருக்கும் யோசிக்க தொடங்கினர்.

தற்பொழுது, தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு “9 ஸ்கின்” என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, தனது நயன்தாரா பெயரில் இருந்து நயன் (9) என்ற பெயரை எடுத்துக்கொண்டு தனது புதிய நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன், டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து அவர் நடத்தவுள்ளார். இந்த ஸ்கின் கேர் பிராண்ட் பிசினஸ், வரும் செப்.29-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நயன்தாரா ஏற்கனவே தோல் மருத்துவரான டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து தி லிப் பாம் கம்பெனி என்ற லிப் பாம் பிசினஸை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது, சருமம் மற்றும் அழகுசாதன உலகில் ‘9 SKIN’ நிறுவனம் அவரது இரண்டாவது தொழில் முயற்சியாகும்.

இது குறித்து அறிவிப்பில், இன்று, ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ‘9 SKIN’ பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது, அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பான்-இந்திய நட்சத்திரமாகிவிட்டார் நயன்தார. இந்த திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையில், நயன்தாரா இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் 75 வது படத்திலும் சித்தார்த், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் இணைந்து நடிக்கும் டெஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், அகமது இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்