தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், இன்று ஒரே நாளில் 4,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,91,754 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் குறையத் தொடங்கிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் 4,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று 50 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,741ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 19 பேரும், அரசு மருத்துவமனையில் 31 பேர் மரணமடைந்தனர்.

இன்று கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னையில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,546 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 முதல் 60 பேர் வரை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நிலையில், 5000 பேர் வரை குணமடைந்து வருவது, சற்று ஆறுதல் அளித்து வருகிறது.

Published by
Surya

Recent Posts

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

13 minutes ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

43 minutes ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

1 hour ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

2 hours ago

INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

3 hours ago

“என்னை கொல்ல முயற்சி” தீராத விளையாட்டுப் பிள்ளை நடிகை பகீர் புகார்!

மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…

4 hours ago