Minister CV Shanmugam [File Image]
சிவி சண்முகம் மீதான இரு வழக்குகளில் 6 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீதான 6 வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 6 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். சிவி சண்முகம் மீதான இரு வழக்குகளில் 6 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசை கண்டித்து போராடியதால் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு விசாரணையின்போது, சி.வி.சண்முகம் மீதான 6 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், நீதிபதிகள் கூறுகையில், அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் ஏன் நீதித்துறையை இழுக்கிறீர்கள்? என சி.வி.சண்முகம் பேச்சைச் சுட்டிக்காட்டி நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்த கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை, நீதித்துறையை பொறுத்தவரை ஒரே ஒரு அரசுதான். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் நீதிபதி அச்சுறுத்தப்பட்டார், மிரட்டப்பட்டார் என சண்முகம் பேசியிருந்தார் எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…