#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் 13 வயது சிறுமி உட்பட ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2099 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79,651 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 14 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, சென்னையை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் சிவகங்கையை சேர்ந்த 13 வயது சிறுமி உட்பட இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,099  ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 17 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 169 பெரும், திருவள்ளூரில் 133 பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும், மதுரையிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 45 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

“கண்டிப்பா ‘ரோலக்ஸ்’ இருக்கு!” ரெட்ரோ நிகழ்வில் லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…

34 minutes ago

“ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!” விஜய் வாழ்த்து!

சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…

1 hour ago

“திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!” மு.க.ஸ்டாலின் பெருமிதம்! 

சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…

2 hours ago

அமுல் பால் விலை ரூ.2 உயர்வு.., இன்று முதல் அமல்.!

சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…

2 hours ago

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…

3 hours ago

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…

4 hours ago