வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைகப்பட்டுள்ளது.

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக எல்பிஜி சிலிண்டரின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாறும், அதன் தகவல்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகாலையில் புதுப்பிக்கப்படும்.
அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு சிலிண்டர் ரூ.868.50-ஆக விற்பனையாகிறது.
பெருநகரங்களில் 19 கிலோ எரிவாயு சிலிண்டர்
- டெல்லி – ரூ.1747.50
- கொல்கத்தா – ரூ.1851.50
- மும்பை – ரூ.1699
- சென்னை – ரூ.1906
கடந்த ஏப்ரல் மாதத்தில், சர்வதேச விலைகளுக்கு ஏற்ப மாதாந்திர திருத்தத்தில் வணிக எல்பிஜி விலைகள் 19 கிலோ சிலிண்டருக்கு ரூ.41 குறைக்கப்பட்டன. மார்ச் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சிலிண்டருக்கு ரூ.6 உயர்வைத் தொடர்ந்து இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டது