அதிமுகவில் இருந்து மற்ற கட்சியில் இணைந்தவர்கள், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 7 பேர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக-வில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டபேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அதிமுகவில் இருந்து மற்ற கட்சியில் இணைந்தவர்கள், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என 7 பேர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு, விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களான என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், முன்னாள் எம்.எல்.ஏ.வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு, விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களான என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…