டியூசன் முடிந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 73 வயது முதியவர் கைது..!

Published by
murugan

சென்னை அம்பத்தூர் அம்பத்தூரில் உள்ள லெனின் நகர் , இரண்டாவது மெயின் ரோட்டில்  ஒரு தம்பதிவசித்து வருகின்றனர்.அவர்களுக்கு 6 வயதிலும் , 10 வயதிலும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 30-ம் தேதி மலை டியூசன் சென்றுள்ளனர்.

டியூஷன் முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு நடந்து  வந்து கொண்டிருந்தன.அப்போது லெனின் நகர், 10 வது மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) .

இவர் 10 வயது சிறுமியை அழைத்து தனியாக பேசியுள்ளார். அப்போது கன்னத்தில் முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அச்சிறுமியை சத்தம் போட்டதில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் சுந்தரமூர்த்தி  அந்த சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் அந்த சிறுமியை மீட்டு அவரை வீட்டில் ஒப்படைத்தனர். அந்த சிறுமி  சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையெடுத்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுந்தரமூர்த்தி கைது செய்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Published by
murugan

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

36 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

1 hour ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

3 hours ago