ஐந்து ஆண்டுகளாக சென்னையில் 140 டன் அமோனியம் நைட்ரேட் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கொரானா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பெரும் போராட்டம் நிலவக்கூடிய சூழ்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. துறைமுகத்துக்கு அருகில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிதே இந்த விபத்துக்கு காரணம் என அந்நாட்டு பிரதமர் ஹசன் டயப் அவர்கள் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு அவர் கண் கலங்கியது பலரது நெஞ்சையும் உருக்கியது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பேசுகையில், சென்னை துறைமுகத்துக்கு ஒட்டிய கிடங்கில் 740 டன் அமோனியம் 5 ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே லெபனான் நாட்டில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பதற்கு இந்த மருந்துதான் காரணம். எனவே சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிவிபத்து ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…