8 வழிச்சாலை வழக்கு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.
சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கபட்டது. மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது.
சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திட்டத்தின் இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது .இந்த வழக்கை நீதிபதிகள் ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025