கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி!

திண்டுக்கலை சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கலை சேர்ந்த 95 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 18ம் தேதி தொற்று கண்டறியப்பட்ட இந்த மூதாட்டியின் வீட்டருகில் வசிக்கும், டெல்லி சென்று திரும்பிய நபருக்கு தொற்று கண்டறியபட்ட நிலையில், அவர் வீட்டருகில் வசித்த மூதாட்டியின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025