சென்னையில் இன்று மட்டும் 987 பேருக்கு கொரோனா உறுதி.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,46,593 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே 932 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,32,772பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 10,879 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,942 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025