Murder [Representative Image]
நெல்லை மாவட்டத்தில் 19 வயது இளைஞர் படுகொலை செய்ப்பட்டுள்ளார். காதல் விவகாரம் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த முத்தையா எனும் 19 வயது இளைஞர் ஒருவர் நேற்று வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். வீட்டில் இருந்து சென்ற அவர் வெகு நேரமாக வீடு திரும்பாத காரணத்தால், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்
அப்போது ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஓடை பகுதியில் வயிறு மற்றும் கழுத்துபகுதியில் கத்தி போன்ற கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு திசையன்விளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்ட்டு அவரது உடல் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முத்தையா , வேலை பார்க்கும் ஊரில் வேற்று சாதி பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த கொலைக்கு காதல் விவகாரம் காரணமா.? அல்லதுவேறு காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…