கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவனை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அந்த மாணவன் , மாணவியை திரைப்படம் பார்க்க ஆந்திரா அழைத்து சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் திரைப்படம் பார்க்காமல் ஆந்திர எல்லையில் உள்ள ஒரு ஏரியில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பெண்ணின் காதலன் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரச் சொன்னார். இதையடுத்து அங்கு அந்த மாணவனின் நண்பர்கள் இரண்டு பேர் அங்கு வந்தனர்.
இதையடுத்து மாணவியின் காதலனும் , அவரது நண்பர் ஒருவரும் மதிய உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.பின்னர் மாணவியுடன் இருந்த ஒரு மாணவன் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். அந்த மதுவை குடித்த மாணவி சில நிமிடங்களில் மயங்கியுள்ளார்.
இதைப் பயன்படுத்தி கொண்ட அந்த நபர்அந்த மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த மாணவியின் காதலன் ,அவருடன் இருந்த இன்னொரு நண்பர் இருவரும் சேர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாலை அந்த மாணவியை வேப்பனப் பள்ளியில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
இதையடுத்து தனக்கு நடந்த கொடுமையை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பிறகு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்து உள்ளனர். புகார் அடிப்படையில் அந்த மாணவியின் காதலன் உட்பட அவரது இரண்டு நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…