திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கல்கொத்தனூர் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்த நிலையில், அந்த கார் மீது அரசு பேருந்து மோதி இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், கார் மீது மோதியதில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதன் காரணமாக அதில் பயணித்த 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த அடுத்த நொடியே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறியுள்ளார்கள். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
