மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தாய் தற்கொலை.!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை செய்து வருகிறார், இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் மங்கையரசி என்ற மகளும் இருக்கிறார், இந்நிலையில் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒத்திகைக்கு 3 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை பிடித்தார்.
இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை அவருடைய வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளார்கள் ஆனால் கதவு திறக்கப்படவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வேகமாக கதவை உடைத்தனர், அப்பொழுது வீட்டிற்குள் காளீஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது, மேலும் குழந்தைகள் விஷம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் காளீஸ்வரி தனது தற்கொலைக்கு வீட்டின் உரிமையாளர் கார்திகேயன்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார், மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரி தகாத வார்த்தைகளில் காளீஸ்வரியை திட்டியதாக தெரிய வந்தது. அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…