Murder : தூத்துகுடியில் பரபரப்பு..! காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம்.! மரம் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு.!

Published by
மணிகண்டன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் ஊராருகே காட்டுப்பகுதியில் நேற்று இரவு கார் ஒன்று எரிந்து கொண்டு ஏரிந்து கொண்டுள்ளது.  இதனை கண்ட ஊர் மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் விளாத்திகுளம் காவல் துறைக்கு காவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்டு இருந்த தீயை அணைத்தனர். அப்போது காவல் துறை சோதனையில் சந்தேகத்திற்கு இடமாக காரின் பின்பகுதி(டிக்கி பகுதி)யில் ஏதோ ஒன்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் அதனை திறந்து பார்க்கையில் அதில் சடலம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து யாரோ ஒருவர் காரினுடன் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது உறுதியானது. இதனை அடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த நிலையில் உள்ள சடலத்தை ஆய்வு செய்தபோது அதில் கொல்லப்பட்டவர் ஆண் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அருகில் இருந்த செல்போன் , காரின் பதிவெண் TN 64 F 1584 ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர், காரில் எரித்து கொள்ளப்பட்டது ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் 48 வயதான நாகஜோதி என்பது தெரியவந்தது. மேலும் விசாரிக்கையில்  நாகஜோதியை காணவில்லை என அவரது குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சமபவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , சம்பவ இடத்தை ஆராய்ந்து பின்னர், நாகஜோதியை கொலை செய்த மர்ம கும்பலை கண்டறிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தற்போது கொலையாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை தனுஸ்ரீ தத்தா.!

சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…

1 hour ago

ஆலப்புழா சென்ற அச்சுதானந்தன் உடல்.., இறுதி அஞ்சலிக்கு வழிநெடுக மக்கள்.!

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…

2 hours ago

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் : சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…

2 hours ago

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரிட்டன் செல்கிறார்.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…

3 hours ago

“தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…

4 hours ago

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!

சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…

4 hours ago